Skip to content

OpenERP – ஓர் அறிமுகம்

May 20, 2013

openerp_logoகட்டற்ற மென்பொருளில் OpenERP என்பது ஓர் வணிக வள திட்டமிடல்(ERP) மென்பொருளாகும். இம்மென்பொருள் உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதி, அறக்கட்டளை போன்ற அனைத்து வகையான வணிக நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒன்றாகும்.

இது இலவசமாக கிடைக்கக்கூடிய AGPL(GNU AFFERO GENERAL PUBLIC LICENSE) ஐ அடிப்படையாக கொண்டது.

OpenERP Timeline:

2002:ஆம் ஆண்டு ஃபேபியன் பின்க்ர்ஸ் (Fabian Pinckaers) என்பவர் கட்டற்ற மென்பொருள்களுக்கான வணிக வள திட்டமிடுல் (ERP) மென்பொருள் உருவாக்கினார்.

2004: Fabian Pinckaers பெல்ஜியம் நாட்டில் Tiny sprl என்ற நிறுவனத்தை உருவாக்கி TinyERP என்ற தனது முதல் வெளியீட்டை வெளியிட்டார். இம்மென்பொருளானது அனைத்து வாடிக்கையாளர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டுமென எண்ணினார்.

2006: OpenERP V3.0 வெளியிடப்பட்டது. 2007-ல் அனைவருக்கும் பொதுவான SVN repositary திறக்கப்பட்டது. இதில் அங்கீகரிக்கப்பட்ட 35 module களும் மற்றும் 120 இதர module களும் வெளியிடப்பட்டது.

2008: ல் நிரல்களானது lanchpad/bazaar-ல் அளிக்கப்பட்டது மேலும் TinyERP ஆனது OpenERP என்று பெயரிடப்பட்டது.

2009:-ல் Openerp 5.0 வெளியிடப்பட்டது இதில் 114 அங்கீகர்க்கப்பட்ட module-களும் மேலும் இதர 250 module-களும் வெளியானது.

2010: ஜூலை 6.0 alpha வெளியீட்டை வெளியிட்டது. இதன் பின் Community, ஆனது மிகப்பெரிய அளவில் உலகெங்கும் உருவானது. கட்டற்ற மென்பொருளில் OpenERP மிகவும் தரம் வாய்ந்த மென்பொருளாக உருவானது. இது 500 module-களும் 30 மொழிகளில் உபயோகிக்கவல்ல இம்பொருள் 80 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

 2011-ல் OpenERP 6.0 வெளியானது இது பயணாளிகளுக்கு எளிய வகையிலும். அனைத்து வகையான வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும் வெயியானது.

 2012-ல் OpenERP 6.1 வெயியானது. இது கைப்பேசிகளிலும் உபயோகிக்கும் வகையிலும் வெளியானது. பின்னர் 2012 ஆண்டு இறுதில் OpenERP 7.0 மேலம் பல மாற்றங்களுடன் நிறைய சிறப்பம்சங்களுடன் வெளியாகியுள்ளது.

 OpenERP ஆனது தற்போது முழுக்க முழுக்க இணைய உலாவியில் (Internet Browser) இயங்கக்கூடிய ஓர் இணையவழி மென்பொருளாகும்.

 இதில் அடங்கியுள்ள Module-கள்

          1. Sales
          2. Purchase

          3. Manufacturing

          4. Warehouse

          5. Accounting

          6. Human Resource

மற்றும் பல

OpenERP-ல் அடங்கியுள்ள நிரல் மொழிகள்(Programming Languages)

          1. Python

          2. XML

          3. JavaScript

தற்போது OpenERP-7 வெளியீடு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் மேலும் பல சிற்ப்பம்சங்கள் கிடைக்கப்பெறுகின்றன. மேலும் 1000 க்கும் மேற்பட்ட Module-க்ள் http://v6apps.openerp.com/ என்ற இணைய தளத்தில் கிடைக்கின்றன.

 OpenERP-யை சோதனையோட்டமாக பயன்படுத்திப்பார்க்க https://www.openerp.com/en/ என்ற இணையதளத்தையும், தறவிறக்கம் செய்ய http://nightly.openerp.com/7.0/nightly/src/openerp-7.0-latest.tar.gz என்ற இணையதளத்தையும் அணுகலாம்.

openerp7

Advertisements
No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: